'தில்லுக்கு துட்டு 2' படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சந்தானம் தற்போது அடுத்த படம் நடிக்க தயாராகிவிட்டார்.  

இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்க உள்ள, படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது. 

அதாவது நடிகர் சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின்,  டைட்டில் 'A1' என்றும் அதன் கீழே அக்யூஸ்ட் நம்பர் 1 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த போஸ்டரில் இருந்தே, சந்தானம் இந்த படத்தில், காமெடி கலந்த எண்டர்டெயின்மெண்ட் படத்தில் தான் நடிக்கிறார் என உறுதியாகியுள்ளது.   ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் கையில் விலங்குடன் ஒய்யாரமாக போஸ் கொடுக்கிறார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை தாரா அலிஷா நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் '100% லவ்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான்சன் இயக்கவுள்ள இந்த படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவில் லெட் ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை ராஜ் நாராயணன் தயாரிக்கின்றார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.