santhanam dance with 5 masters
சந்தானத்தின் அடி தடி பிரச்சனைகளுக்கு நடுவே தற்போது அவருடைய படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சந்தானம் VTV கணேஷ் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் " சக்க போடு போடு ராஜா " திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் சந்தானம் அறிமுகமாகும் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப் பட்டது. இந்தப் பாடல் காட்சியில் முதல் முறையாக ஐந்து பிரபல நடன இயக்குனர்களான ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி
ஆகியோர் பணியாற்றியுள்ளனர் .
"கலக்கு மச்சா டவுளத்துள
கால வாரும் காலத்திலே
கலங்க நா கோழையில்லே "
களத்திளே இறங்கி காளபோல
ரைட்டு தாட்டு உள்ளத்திலே
வெச்சு இருக்கும் நல்ல புள்ள"
இன்கிற இந்தப் பாடலுக்கு STR இசை அமைக்க ரோகேஷ் பாடல் எழுத அனிருத் பாடியுள்ளார் .
.jpg)
இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை G.L.சேதுராமன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக், சம்பத் ராஜ் ,ரோபோ சங்கர், சஞ்சனா சிங்,VTV கணேஷ் ஆகியோர் நடித்துள்ளார் .
