படத்துக்கு ‘அக்கியூஸ்ட் நம்பர் 1’என்று பெயர் வைத்ததாலோ என்னவோ முதலில் அக்ரஹாரத்து மாமிகளை கிண்டலடித்து சர்ச்சையில் மாட்டியுள்ள காமெடியன் சந்தானம் மிக லேட்டஸ்டாக வெளியாகியுள்ள ட்ரெயிலர் நடிகை நயன்தாராவின் அந்நாள், முன்னாள், இந்நாள் காதலர்களின் பெயரைக் கிண்டலடித்துள்ளார்.

சந்தானத்தின் ‘ஏ1’பட டீஸர்களுக்கு ஏற்கனவே பிராமண சங்கங்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உள்ளது. பலர் அப்படத்துக்கு தடை கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் பிராமணர்களுக்கு எதிராக எதுவும் இல்லை என்று தன் பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மூலமாக விளக்கம் அளித்தார் சந்தானம். ஆனாலும் இன்னும் அவரது படத்துக்கு எதிர்ப்பு இருக்கவே செய்கிறது.

இந்நிலையில் நேற்று வெளியான ‘ஏ 1’படத்தின் ஸ்னீக் பீக் ட்ரெயிலர் ஒன்றில் நடிகை நயன்தாராவை, அவரது முன்னாள் காதலர்களை வைத்து பங்கம் செய்துள்ளார் சந்தானம். அதில் வரும் ஒரு காட்சியில் மொட்டை ராஜேந்திரனின் அடியாட்கள் வில்லன் சாய்க்கு ஒரு பாஸ்வேர்ட் சொல்லவேண்டும். அதில் முதல் பாஸ்வேர்டாக கிம்பு...பயன்தாரா என்கிறார்கள். அந்த பாஸ்வேர்ட் தவறு என்று சொல்லப்பட அடுத்த பாஸ்வேர்டாக ‘கிரபுதேவா,..பயன்தாரா...என்கிறார்கள். அந்த பாஸ்வேர்டும் தவறாகவே கடைசியாக கிக்னேஷ் சிவன்,...பயன்தாரா’ என்றவுடன் பாஸ்வேர்ட் ஓ.கே. ஆகிறது.

சந்தானம் நயனை இவ்வளவு வெளிப்படையாகக் கலாய்த்திருப்பதால் அவரது லேட்டஸ்ட் காதலர் விக்னேஷ் சிவன் விரைவில் வீறுகொண்டு எழுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.