மேலும், மதுமிதா, யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த் என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளங்களே டிக்கிலோனாவுக்காக இணைந்துள்ளனர்.
அவர்களுடன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளேயருமான ஹர்பஜன் சிங்கும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 

விளையாட்டுத் துறையிலிருந்து திரையுலகில் அவர் தடம்பதிக்கும் முதல் படம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானை தொடர்ந்து, வெள்ளித்திரையில் அடியெடுத்துவைக்கும் மற்றொரு வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஹர்பஜன் சிங்.

 'விக்ரம் 58' படத்தில் இர்ஃபான் பதான் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.இயக்குநர் சினிஷின் சோல்ட்ஜர் ஃபேக்டரி நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷுட்டிங், கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தற்போது படக்குழுவுடன் இணைந்துள்ள சிஎஸ்கே சிங்கம் ஹர்பஜன்சிங், தனது 'டிக்கிலோனா' ஆட்டத்தை தொடங்கியுள்ளார். அவரது முதல்நாள் படப்பிடிப்பின்போது, ஹீரோ சந்தானத்துடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. 

அப்போது, சந்தானமும் ஹர்பஜன்சிங்கும் படக்குழுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து, சந்தானம், ஹர்பஜன் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

யுவன்சங்கர்ராஜா இசையமைக்கும் 'டிக்கிலோனா' படத்துக்கு, கனா புகழ் அருண்ராஜா காமராஜ் பாடல்களை எழுதுகிறார். நகைச்சுவை படமாக உருவாகும் இந்தப் படத்தை, 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோடை விருந்தாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.