பிரபல தொலைக்காட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக,  வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'ராஜா ராணி' . இந்த சீரியல் மூலம் ரீல் ஜோடியாக நடித்த ஆலியா மற்றும் சஞ்சீவ் தற்போது ரியல் ஜோடியாக மாறியுள்ளனர்.

சஞ்சீவ்வை காதலுக்காக ஆலியா மானசா, இவர் ஏற்கனவே காதலித்து வந்த சதீஷ் என்பவரை பிரேக் அப் செய்து விலகினார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

இந்நிலையில் இவர்கள் இருவரும், தங்களது காதலை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் இணைத்து நிறைய பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அந்த பேட்டியில்  சஞ்சீவ், ஆல்யா மானசாவை நடுரோட்டில் பழிவாங்கிய விஷயம் குறித்து பேசியுள்ளனர்.

ஆல்யா மானசா ஒரு முறை சஞ்சீவுக்கு பிடிக்காத விஷயத்தை செய்து விட்டாராம். ஆலியா பல முறை மன்னிப்பு கேட்டும் சஞ்சீவ் சமாதானம் ஆகாதது போல முகத்தை வைத்துள்ளார். பின் திடீர் என காரை நிறுத்தி செய்த தவறுக்காக அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு மிகவும் சத்தமாக "சஞ்சீவ் ஐ லவ் யூ' என்று சொல்லு என கூறியுள்ளார்.  ஆலியாவும் முதலில் கூச்சத்துடன் மெதுவாக ஐ லவ் யூ என சொல்ல அதனை ஏற்று கொள்ளாத சஞ்சீவ் சத்தமாக கூறவேண்டும் என கூறியுள்ளார்.

பின் ஆலியா வேறு வழி இல்லாமல் சத்தமாக அதுவும் நடு ரோட்டில் நின்று sanji சொன்ன ஆல்யாவை சத்தமாக சொல் என சஞ்சீவ் கூற, யாரும் பார்க்காத வண்ணம் சத்தமாக கூறிவிட்டு  காருக்குள் ஏறிவிட்டாராம் ஆல்யா.

இதை அவர்கள் மிகவும் கலகலப்பாக கூறியுள்ளார், அதோடு சஞ்சீவ் காதலியை இப்படி கூட பழிவாங்குவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.