பிரபலங்கள் அடிக்கடி மிட்நைட் பார்ட்டியில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில், அவர்கள் இதுபோன்ற இடங்களுக்கு செல்வது, வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

ரசிகர்கள் வெளியில் சென்றால் சூழ்ந்து கொள்வதால்,  சுதந்திரமாக வெளியில் செல்லாமல் இருக்கும் பல பிரபலங்கள் இதுபோன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை மட்டுமே பொழுது போக்காக வைத்துள்ளனர்.

 ஆனால் சில சமயங்களில் அதீத போதையில், ஒரு சில பிரச்சினைகளும் எழுகின்றன. அந்த வகையில், பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி, சஞ்சனா கல்ராணி, கன்னட தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் மீது பீர் பாட்டிலை வீசி உடல்ரீதியாக தாக்கி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் உண்மையில் வந்தனா மீது தான்... பாட்டிலை தூக்கி வீசி உடல்ரீதியான எந்த காயமும் அவருக்கு ஏற்படுத்தவில்லை என்றும், வாக்குவாதம் மட்டுமே நடந்ததாக கூறியுள்ளார் சஞ்சனா. இந்த சம்பவம்  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சஞ்சனா கல்ராணி, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்திருந்தாலும், தற்போது அருண்விஜய் நடித்து வரும் 'பாக்சர்' படத்தில் கதாநாயகியாகவும் மற்றும் விஜய் டிவி பிரபலம் ராமர் நடித்து வரும் 'போடா முண்டம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.