ஒய்.ஜி மகேந்திரனுக்கு சங்கீத நாடக அகாடமி விருது! ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து!
சங்கீத நாடக அகாடமி விருது, பிரபல நாடக நடிகரும், திரைப்பட நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சங்கீத நாடக அகாடமி விருது இந்தியாவில் உள்ள இசை, நடனம், நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகும். வருடத்திற்கு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது, 2022 ஆம் ஆண்டுக்கு சிறந்த நாடக கலைஞர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சான்றிதழ் வழங்கிய பாராட்டிய புகைப்படத்தை... ட்விட்டர் பக்கத்தில் அவருடைய மகள் மிகவும் பெருமையோடு பகிர்ந்துள்ளார். இதையடுத்து ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஒய்.ஜி.மகேந்திரன் இதுவரை நூற்றுக்கும் அதிகமான மேடை நாடகங்களை அரங்கேற்றி உள்ளதோடு 5000க்கும் மேல் நாடகங்களில் நடித்துள்ளார். நாடக நடிகர், திரைப்பட நடிகர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட இவருக்கு நாடகத்தின் மீது பற்று வர காரணமாக இருந்தது இவருடைய தந்தை ஒய் ஜி பார்த்தசாரதி தான். தமிழகத்தில் முதல் முதலில் நாடக கலைகளை அமைத்து கலைகளை வளர்த்த முன்னோடிகளில் ஒருவர்.
எம் பி ஏ பட்டப்படிப்பு படித்திருந்தாலும், நாடகத்தின் மீது உள்ள ஈடுபாட்டின் காரணமாக நாடக கலைஞராகவே மாறினார். இதுவே இவருக்கு திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. கடந்த சில வருடங்களாக தந்தையை தொடர்ந்து இவருடைய மகள் மது வந்தியும் நாடக கலைஞராக உள்ளார். ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார் மதுவந்தி. தற்போது தன்னுடைய தந்தை சங்கீத அகாடமி விருதை, குடியரசு தலைவர் கையால் பெற்றதை புகைப்படம் மற்றும் சில வீடியோக்கள் பகிர்ந்து... பெருமையோடு வெளிப்படுத்தியுள்ளார் மதுவந்தி என்பது குறிப்பிடத்தக்கது .
இரண்டு தோல்வி படங்களுக்கு பின்... மீண்டும் முன்னணி ஹீரோ படத்தில் நடிக்கும் பூஜா ஹெக்டே..!