ஆரம்பத்தில் கவினுக்கு மக்களிடம் நெகட்டிவ் இமேஜ் இருந்தாலும், தற்போது அனைவரையும் கவர்ந்த ஒரு போட்டியாளராக இருப்பவர் கவின் தான். இதற்கு முக்கிய காரணம் உள்ளே வந்த நாள் முதல் கவின் அவராகவே இருக்கிறார். எந்த ஒரு நடிப்பும் அவரிடம் தெரியவில்லை என்பது தான்.

இந்நிலையில் நேற்றைய தினம், யாரும் எதிர்பாராத வண்ணம், பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு கவின் வெளியே செல்லும் முடிவை எடுத்தார்.

இவரின் இந்த முடிவு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மக்களை மட்டும் இன்றி, போட்டியாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. போட்டியாளர்கள் எவ்வளவோ தடுத்தும், தான் வெளியேறும் முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாக கூறி வெளியேறினார் கவின்.

இதில் இருந்து இன்னும் போட்டியாளர்கள் மீள வில்லை என்று கூறலாம். முதல் ப்ரோமோவில் லாஸ்லியா, தன்னுடைய அம்மா, அப்பாவிற்காக தான் உள்ளே இருப்பதாகவும், தனக்கு இறுதி போட்டி வரை செல்ல ஆசை இல்லை என்று தர்ஷனிடம் கூறி, அழும் காட்சி வெளியாகி இருந்தது.

அதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், சாண்டி கவினை மிகவும் மிஸ் செய்வதாக கூறுகிறார். குறிப்பாக, கவினின் மெல்டல் இங்கு தான் இருக்கிறது அதை அணிந்து கொண்டு தான் பைனலுக்கு செல்வேன். நீ இங்கு இல்லை என்றாலும் மனதில் இருக்கிறாய். உன்னை பார்த்து பயங்கரமா கேள்வி கேட்கணும் தாயாரா இரு என சாண்டி பேசும் காட்சிகள் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.