பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம், தொகுப்பாளராக அறிமுகம் கொடுத்தவர் தான் காஜல். அப்போது இவருக்காக தனி ரசிகர் கூட்டமே இருந்தது. இதன் காரணமாக ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார்.

இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தவர் தான் தற்போது அனைவரையும் தன்னுடைய நடனத்தால் கட்டிப்போட்ட சாண்டி. 

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்துப்பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடன இயக்குனர் சாண்டி சிலியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்தது தான். 

தற்போது  சாண்டி  தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது இவரிடம் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொடுள்ள, இவருடைய முதல் மனைவி காஜல் பற்றி ஒரு சில கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால் சாண்டி அவரை பற்றி பேச மறுத்துவிட்டார்.  மேலும் தன்னுடைய முதல் மனைவியை பற்றியும் கடந்த கால வாழ்க்கையையும் தான் மறக்க நினைப்பதாக கூறியுள்ளார். 

இதற்கு காரணம் நான் நிறைய கஷ்டங்களை தாண்டி விட்டேன் , நிறைய அழுது விட்டேன் இனி என் வழக்கை நன்றாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளாராம்.