Asianet News TamilAsianet News Tamil

Michael first look : சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் கெத்து காட்டும் சந்தீப் கிஷான்- வைரலாகும் மைக்கேல் பர்ஸ்ட் லுக்

Michael first look : ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட மைக்கேல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது.

sandeep kishan vijay sethupathi starrer michael first look released
Author
Tamil Nadu, First Published May 7, 2022, 1:31 PM IST

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான புரியாத புதிர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இதையடுத்து இவர் இயக்கிய இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்தும் நடித்திருந்தார்.

இதன்பின்னர் பிந்துமாதவி நடித்துள்ள யாருக்கும் அஞ்சேல் படத்தை இயக்கி முடித்துள்ள அவர், தற்போது மைக்கேல் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சந்தீப் கிஷான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல இயக்குனரும், நடிகருமான கவுதம் மேனன் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

sandeep kishan vijay sethupathi starrer michael first look released

ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகிறது. இப்படத்தின் நாயகனான சந்தீப் கிஷானின் பிறந்தநாளான இன்று, மைக்கேல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அந்த போஸ்டரில் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் கையில் துப்பாக்கியோடு சந்தீப் கிஷான் செம்ம மாஸாக காட்சியளிக்கிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இதையும் படியுங்கள்...   VJ chitra : சித்ரா ஒன்னும் நல்லவ கிடையாது... டப்பா நிறைய காண்டம் இருந்துச்சு - பகீர் கிளப்பிய சித்ராவின் தோழி

Follow Us:
Download App:
  • android
  • ios