விஷால் பிலிம் பாக்டரி (VFF) தயாரிப்பில் புரட்சி தளபதி விஷால்  நடிக்க இருக்கும் 25-வது படம் சண்டைகோழி -2. இந்த படத்தின் முதல் பாகம் முழுவதும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பிற்கு மதுரைக்கு செல்லாமல் மதுரை பகுதிகளை போலவே பிரம்மாண்டமான செட்  அமைக்க திட்டமிட்டுள்ளாராம் படக்குழுவினர் இதற்காக சென்னை பின்னிமில்லில் 10எக்கர் நிலபரப்பில்  500கடைகள்,

மதுரை மீனாட்சியம்மன் கோவில், என அழகான மதுரையை 6- கோடி செலவில் வடிவமைப்பதில் இறங்கி உள்ளனர்கள்.

அதற்கான பூஜை இன்று காலை பின்னிமில்லில்   போடப்பட்டது,  விஷால் பிலிம் பாக்டரி (VFF) இணை தயாரிப்பாளர் திரு.M.S.முருகராஜ், இயக்குனர் திரு.N.லிங்குசாமி மற்றும் கலை இயக்குனர் ராஜீவ்வன் அவர்கள்  தொடங்கி வைத்தனர்கள்.