பிரபல நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி அவருடைய காதலர் தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் இலங்கை மாடல் தர்ஷன். நிகழ்ச்சி துவங்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் ஓட்டுகள் சற்று குறைவாக பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் 100 ஆவது நாளில், டைட்டில் வழங்கும் விழாவின் போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உலக நாயகன் ராஜ் கமல் பிலிம்ஸ் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் தர்ஷன் நடிப்பார் என அறிந்தார். இதை தொடர்ந்து கடந்த வாரம், முதல் படம் பற்றி விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் தர்ஷன் தன்னிடம் பழகி விட்டு, திருமணம் செய்து கொள்வதாக கூறி, தற்போது தன்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என தெரிவித்து, சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இந்த விஷயம், தர்ஷனின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.