விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்ற தர்ஷன் மீது அவருடைய முன்னாள் காதலியும், மாடலுமான சனம் ஷெட்டி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பகீர் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் தெரிவித்தார். 

இதையும் படிங்க:  "தலைவர் 168" படத்தில் நயன்தாராவிற்கு இப்படி ஒரு கேரக்டரா? சத்தமே இல்லாமல் கசிந்த அதிரடி தகவல்...!

இதனை மறுத்த தர்ஷன் தன்னை சனம் ஷெட்டி டார்ச்சர் செய்வதாகவும், பிக் பாஸ் ரம்யா திருமணத்திற்கு சென்ற போது, முன்னாள் காதலன் உடன் பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறினார். மேலும் முன்னாள் காதலன் நடிகர் அஜயுடன் சனம் ஷெட்டி ஒரு இரவு ரூம் போட்டு தங்கியதால் அவரை நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன் என்று தர்ஷன் உறுதியாக அறிவித்தார். 

இதையும் படிங்க: குட்டி பாப்பா முதல் அம்மா ஆனது வரை... நடிகை எமி ஜாக்சனின் சூப்பர் கிளிக்ஸ்...!

2015ம் ஆண்டு வெளிவந்த கலைவேந்தன் என்ற படத்தில் அஜய்க்கு ஜோடியாக சனம் ஷெட்டி நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்சனையில் பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் தான் சனம் ஷெட்டி, தர்ஷனை காதலித்துள்ளார். 

இதனிடையே, தர்ஷனின் குற்றச்சாட்டை கேட்டு ஆத்திரத்தில் கொதித்தெழுந்த சனமின் முன்னாள் காதலர் அஜய், நைட் பார்ட்டியில் என்ன நடந்தது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது. 

பிக்பாஸ் ரம்யா கல்யாணத்திற்கு நான் சென்றது உண்மை, அங்கு சனம் ஷெட்டியும் இருந்தார்.  அங்கு நாங்கள் இருவரும் பார்த்துக்கொண்டது உண்மை. ஆனால் நாங்கள் ஒன்றாக இல்லை. ஏன் பேசிக்கொள்ள கூட இல்லை என்று ஓப்பனாக பதிலளித்துள்ளார். அடுத்து தர்ஷன் என்ன சொல்ல போறாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம்...!