Sanam Shetty Brother Rahul Passed Away in An Accident : பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி தனது இளைய சகோதரர் ராகுல் ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமான செய்தியை பகிர்ந்துள்ளார்.
Sanam Shetty Brother Rahul Passed Away in An Accident : கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா அழகிப் போட்டியில் டைட்டில் வென்ற நடிகை சனம் ஷெட்டி மாடலும், நடிகையும் ஆவார். கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அம்புலி படம் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தைத் தொடர்ந்து மாயை, தொட்டால் விடாது, விலாசம், கதம் கதம், கலை வேந்தன், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், என்ன எந்தப் படமும் அவருக்கான அடையாளத்தை கொடுக்கவில்லை.
எதிர் வினையாற்று படத்தில் சனம் ஷெட்டி:
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட எதிர் வினையாற்று என்ற படத்தில் நடித்து வருகிறார் சினிமா வாய்ப்பு இல்லாத நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். இந்த நிகழ்ச்சி அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகும் கூட அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8
இதைத் தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் விளையாடும் விதத்தை வைத்து விமர்சித்து வந்தார். இந்த நிலையில் தான் அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சோகமான செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், தனது இளைய சகோதரர் ராகுல் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இது நானும் அப்பாவும் மீள முடியாத ஒரு இழப்பு. இதனை எப்போதும் எப்படியும் நியாயப்படுத்த முடியாது.
சனம் ஷெட்டியின் சகோதரர் விபத்தில் பலி
என் அன்பான சகோதரர் ராகுல், வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் உன்னை இழப்போம். நீ இருக்கும் இடத்திலாவது அமைதியாகவும், சந்தோஷமாகவும் இரு. எங்களுடன் நீ செலவிட்ட விலைமதிப்பில்லா நேரத்திற்கும், உனது அன்பா இதயத்திற்கும் நன்றி. ஒருபோதும் விடை பெற முடியாது. மறுபுறம் விரைவில் உன்னை சந்திப்போம் என்று சோகமாக பதிவிட்டுள்ளார். மேலும் தம்பியுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
தனது சகோதரர் ராகுல் விபத்தில் உயிரிழந்து விட்டிருப்பதாக குறிப்பிட்ட சனம் ஷெட்டி என்ன விபத்து எங்கு நடந்தது, என்ன ஆச்சு என்பது குறித்து எதையும் குறிப்பிடவில்லை. ராகுல் என்று குறிப்பிட்டு விபத்தில் இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
