பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்திக்கு இடையே சண்டை பற்றி கொண்டு, சுரேஷ் குக்கிங் டீமில் இருந்து விலகி தற்போது டாய்லெட் டீமுக்கு சென்று விட்டார். அவர் சமையல் அறையில் சனத்திடம்  முட்டி கொண்டாலும், அனைவர் மத்தியிலும் அனிதா தான் சமையல் அணியை விட்டு தான் செல்ல காரணம் என கூறினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதானால் அனிதா, நேற்று நிஷா முன் அழுது... நான் என்ன பண்ணுன அவரை, என தன்னை நியாய படுத்தினார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் இன்றைய முதல் புரோமோவிலேயே ரேகா மற்றும் சனம் ஆகியோர் இடையே நடக்கும் சண்டை தான் ஹை லைட்டாக காட்ட படுகிறது. தான் ஏற்று கொண்ட வேலையை நீங்கள் ஏன் செய்தீர்கள் என்பது தான் சனத்தின் பிரச்சனை. இவர்கள் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க இடையில் ரம்யாவும் தலையிடுகிறார். 

இதற்கு ரேகா, தான் உதவி செய்வதற்காக தான் இப்படி செய்தேன் என கூற... ரம்யா பாண்டியன் நீங்கள் இனி யாருக்குமே உதவ வேண்டாம் என கூறுகிறார். ஆனால், ரேகா நான் குக்கிங் டீமின் கேப்டன் என கூறுகிறார். இவர் பேசுவதை தாங்க முடியாமல் சனம் தலையில் அடித்து கொள்ளும் காட்சியும் காட்ட படுகிறது.

அந்த புரோமோ இதோ... 

Scroll to load tweet…