பிக்பாஸ் வீட்டில் திடீர் திடீர் என எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான, சம்யுக்தாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அவரை குலுங்க குலுங்க அழ வைத்து விட்டார் பிக்பாஸ். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று, சம்யுக்தாவின் மகனுக்கு பிறந்தநாள்... அதனை அவர் பீல் செய்து மற்ற போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது.

பின்னர் திடீர் என பிக்பாஸ் வீட்டில் உள்ள அகம் டிவி போடப்படுகிறது. அதில் சம்யுக்தாவின் மகன் கேக் கட் செய்து, அவருடைய குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய காட்சி மற்றும் அம்மாவிற்கு வாழ்த்து சொல்லிய காட்சிகள் இடம் பெறுகிறது.

இதை பார்த்து, சம்யுக்தா குலுங்கி குலுங்கி அழுகிறார். இது நாள் வரை அமைதியாகவும், மிகவும் போல்ட் ஆன பெண்ணாகவும் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்த சம்யுக்தா, கண்ணீர் விட்டு அழும் காட்சி இடம்பெற்றுள்ளது. அழுகின்ற சம்யுக்தாவை கட்டி அணைத்து சக போட்டியாளர்கள் சமாதானம் செய்வதும் காட்ட படுகிறது. 

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...

Scroll to load tweet…