Samudrakani is an important character in the movie Kodi Soda 2

விஜய் மில்டன் இயக்கி வரும் ‘கோலி சோடா 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

சென்னையில் ‘கோலி சோடா 2’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை 10-ஆம் தேதி தொடங்கியது. இந்தப் படத்தை. விஜய் மில்டன் தயாரித்து இயக்கி வருகிறார்.

முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் ஒரு பகுதி மட்டும் கூடைப்பந்து விளையாட்டுப் பின்னணியில் அமைத்துள்ளார்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மற்றும் கதாசிரியர் செம்பன் வினோத் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கிறாராம்.

இந்தப் படம் பற்றி விஜய்மில்டன் கூறியது:

‘கோலி சோடா’வின் முதல் பாகத்தில் வந்து கலக்கிய கதாபாத்திரத்தை போன்று இந்தப் படத்திலும் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஒரு கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் வருவார். அவரது தோற்றம் வித்தியாசமாகவும் பேசப்படும் விஷயமாகவும் இருக்கும். படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது’’ என்றார்.