samayal manthiram divya help old man

பிரபல தொலைக்காட்சியில் 'சமையல் மந்திரம்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி திவ்யா. இவர் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ஆனால் இவரை பலருக்கும் திவ்யா என்பதை விட சமையல் மந்திரம் திவ்யா என்றால் தான் தெரியும். தற்போது இவர் ஒரு சில சின்னத்திரை தொடர்கள் மற்றும் ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் தினமும் வீட்டிற்கு செல்லும் பாதையின் அருகில் ஒரு முதியவர் அனாதையாக இருப்பதைப் பார்த்துள்ளார். ஒரு நாள் அந்த முதியவரிடம் சென்று ஏன் இங்கு தங்கி இருக்கிறீர்கள் என விசாரித்த போது அவர் தன்னுடைய குடும்பத்தால் கைவிடப்பட்டு நடு ரோட்டுக்கு வந்ததாக கூறி கவலைப்பட்டார். 

உடனடியாக திவ்யா நடுரோட்டில் அனாதையாக இருந்த முதியவரை அழைத்துச் சென்று அவருக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்து அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.