Samantha to kill a man
ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் திறமையான இயக்குனர் என பெயர் பெற்றவர் இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா. இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள டீசரில், சமந்தா ஒருவரை வெட்டுவதற்கு ஒத்திகை பார்ப்பது போல இருக்கிறது. இதுவரை மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து பலராலும் ரசிக்கப்பட்ட சமந்தா... ஒரு ஆளை வெட்டுவது போல் இந்தப் படத்தில் வந்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே சமந்தா விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தில் வித்தியாசமாக புகை பிடிப்பது போல் நடித்தார். ஆனால் இந்தப் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றுத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்திருக்கிறார்.
இதே போல் மலையாள நடிகர் ஃபகத்பாசில், ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் திரைக்கதைக்கு மிஷ்கின் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
