விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பசில் ஆகியோர் நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்"  படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. தியாகராஜன் குமாரராஜா இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் குறித்து சமந்தா சமீபத்தில் கூறுகியில்.... 

"சூப்பர் டீலக்ஸ்" படத்தில் ஏற்கனவே 2  நடிகைகள் நடிக்க மறுத்துவிட்டனர். எனினும் இந்த கதாப்பத்திரத்தில் நான் நடித்து இருக்கிறேன். முதலில் தயங்கிய பிறகு துணித்து இந்த படத்தில் நடிக்க முடிவு செய்தேன். இந்த கதாப்பாத்திரம் குறித்து எனது கணவர் நாகசைதன்யாவிடம் கூறியபோது அதிர்ச்சியாக என்னை பார்த்தார்.

ஆனால் தற்போது படம் திருப்தியாக வந்துள்ளது. ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் பல ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும். நானே இந்த படத்திற்கு டப்பிங் பேசியுள்ளேன். விஜய் சேதுபதியை ஷில்பா என்கிற திருநங்கை கதாப்பாத்திரம் திணிப்பாக இல்லாமல் யதார்த்தமாக பொருந்தி இருக்கிறது. 

திருநங்ககைள் மீது இருக்கும் சில எண்ணங்களை இந்த படம் உடைக்கும் என நம்புகிறேன். தற்போது வரை படங்களில் நடக்க மட்டுமே ஆர்வமாக இருக்கிறேன். இயக்குனராகும் எண்ணம் இல்லை. தயாரிப்பாளராகும் ஆசை இருக்கிறது விரைவில் அது நடக்கலாம் என சமந்தா கூறியுள்ளார்.