samantha sacrifies the keethi suresh
நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த 'ரஜினி முருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்கள் மட்டுமே கீர்த்தி சுரேஷ்க்கு கைகொடுத்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து வெளியான 'தொடரி', 'பைரவா' ஆகிய படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. மேலும் இவருடைய நடிப்பு மற்றும் முக பாவனைகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம் படத்தின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தொடர்ந்து பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. மகாநதி படத்தால் அவருக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது.
தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள இந்த படத்தை அண்மையில் பார்த்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூட விழா நடத்தி படக்குழுவை கவுரவித்தார். மேலும் இந்த படத்தை அனைவரும் திரையரங்கம் சென்று பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சமந்தா பட விழாக்களில் எதுவுமே கலந்துக்கொள்ளவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. முதலில் இப்படத்தில் சாவித்திரியாக நடிக்க இருந்தது சமந்தா தானாம்.
ஆனால் அவர் மறுத்து விட்டதால் கீர்த்தி சுரேஷை ஓகே செய்திருக்கிறார்கள் படக்குழுவினர். சமந்தாவிடம் இதுகுறித்து கேட்ட போது கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து நானே ஆச்சர்யப்பட்டு கண்கலங்கிவிட்டேன்.
அவருக்கு தான் எல்லா பாராட்டும் கிடைக்க வேண்டும். நானும் இந்த விழாவில் கலந்துகொண்டால் அவருக்கான முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விடும் என கூறியிருக்கிறார்.
