திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் நடிகை சமந்தா, சில காலம் திரையுலகை விட்டு விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

ஆனால் இந்த தகவல் வதந்தி என்பதை நிரூபிக்கும் விதமாக, தற்போது இவர், நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா நடிப்பில் கடைசியாக தெலுங்கில் ‛ஜானு' திரைப்படம் வெளியானது.  தமிழில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற '96 ' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவானது. ஆனால் தமிழில் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கில் இந்த படம் வெற்றி பெறாமல் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

மேலும் செய்திகள்: ஒரு வயது கூட ஆகாமல் நீச்சல் அடிக்கும் சுஜா வருணியின் குழந்தை! 

இதை தொடர்ந்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடிக்கும் ‛காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் தற்போது நடித்து வருகிறார் சமந்தா. 

இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.  தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தில் சமந்தா நடிகர் பிரசாத்துக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் அஸ்வின் சரவணன் நடிகை டாப்ஸி நடிப்பில் வெளியாகிய 'கேம் ஓவர்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்: குஜால் உடையில் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் பிரபல நடிகையின் பகீர் கிளப்பும் போட்டோஸ்!
 

மேலும் சமந்தா நடிக்க உள்ள படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.