நடிகர் வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திரா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, சமந்தா "நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன் நண்பர்களே" என கூறியுள்ளார்.  

நடிகை சமந்தா (Samantha), தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. திருமண வாழ்க்கையில் சமந்தா இந்த ஆண்டு தோல்வியை சந்தித்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதுதவிர அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். நடிகை சமந்தா அடுத்ததாக நடிக்க உள்ள வெப் தொடர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘பேமிலிமேன் 2’ வெப்தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே அடுத்ததாக இயக்கும் வெப் தொடரில் சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டால் முன்னணி நடிகைகள் மார்க்கெட் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், சமந்தாவுக்கு இதுவே ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்துள்ளது என்றும் கூறலாம். நடிகை சமந்தா (Samantha) விதவிதமான உடையில் ஓவர் கவர்ச்சியை அள்ளி தெரிந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது நடிகர் வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திரா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, சமந்தா "நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன் நண்பர்களே" என கூறியுள்ளார்.