Samantha Completed Dubbing For Her Role in Mersal

தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் மெர்சல் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவரான நடிகை சமந்தா தனது டப்பிங் பணியை நேற்று முடித்துள்ளார்.

தெறி படத்தின் வெற்றிக்குப்பின் அட்லீ விஜய் இணைந்திருக்கும் மெர்சல் படத்தின் டீஸர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது, முந்தைய பட டீஸரின் சாதனைகளையும் முறியடித்து வருகிறது. 

இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதால் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சமந்தாவின் டப்பிங் பணிகள் மட்டுமே முடிவடையாமல் இருந்த நிலையில், தற்போது சமந்தா டப்பிங் பணியை முடித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சமந்தா திருமணம் அக்டோபர் 6ஆம் தேதி கோவாவில் திருமணம் நடக்க உள்ளது. திருமண தேதி நெருங்குவதால் "யுத்தம் சரணம்" படத்தை அடுத்து நாக சைதன்யா நடிக்கவிருந்த தெலுங்கு படத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல சமந்தா படங்களில் நடிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் மெர்சல் படத்தில் சமந்தா டப்பிங் பேச வரவில்லையென்றால் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் அட்லீ. இந்த தகவலை அறிந்த சமந்தா சென்னை வந்து தனக்கான டப்பிங்கை பேசிவிட்டு சென்றிருக்கிறார். சமந்தா டப்பிங் பேசிய சேதி பார்சிலோனாவில் இருக்கும் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சமந்தாவைத் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.