விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் இந்த வருடம் வெளியான ' 96 ' திரைப்படத்தை, ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். பள்ளி பருவ நண்பர்கள் ஒன்றாக சந்திக்கும் போது ஏற்படும் சம்பவங்கள் பற்றியும், பள்ளி காதலை மாயமாக வைத்தும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தை பார்த்த பின் பலரும் தங்களுடைய பள்ளி காதல் நினைவில் வந்ததாக கூறி சமூக வலைத்தளத்தில் கூறி இருந்தனர். மேலும் படத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்தது.

இதனால் '96 ' படத்தை  மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.  அந்த வகையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் சேதுபதி நடித்த வேடத்தில் நடிகர் நானி மற்றும்  த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த லிஸ்டில் நடிகை சமந்தாவும் இணைந்துள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சமந்தா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் பல காதல் காதல் கதைகளில் சமந்தா சிறப்பாக நடித்து வருவதால் தமிழில் நடித்த த்ரிஷாவுக்கு இணையாக சமந்தாவால் நடிக்க முடியும் என நம்புகிறார்கள். இதனால் 'ஜானு'  கேரக்டராக சமந்தா மாற உள்ளாராம். இதன் மூலம் த்ரிஷாவுக்கு டஃப் கொடுக்க உள்ளார் சமந்தா.