’கிக்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கான் உடன் அவர் ஆடிய நடனம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது. 

தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரே படத்தில் காணாமல் போன பூஜா ஹெக்டே-வை (Pooja Hegde) சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தேடி கண்டு பிடித்து தமிழ் திரையுலகின் பக்கம் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளை ஏற்க மறுத்த பூஜா பின்னர், தளபதி விஜய்யின் படம் என்பதாலும், 'பீஸ்ட்' (Beast) படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் என்பதாலும் ஓகே சொல்லிவிட்டார்.

தமிழில் மட்டும் இன்றி, ஹிந்தி, தெலுங்கு அடுத்த அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அம்மணி காட்டில் செம்ம பட மழை என்று தான் கூறவேண்டும். பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே (Pooja Hegde) சமீபத்தில் துபாயில் நடந்த எக்ஸ்போ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினார்.

’கிக்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கான் (Salman Khan) உடன் அவர் ஆடிய நடனம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது. ஏனெனில் அந்த பாடலுக்கு நடன மாடிய போது பூஜா ஹெக்டேவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நடிகர் சல்மான கான் திணறி உள்ளார்.

பின்னர் பூஜா ஹெக்டேவை நிறுத்தச் சொல்லிவிட்டு, கிக் பாடலில் உள்ள நடன அசைவை நினைவு படுத்தும் விதமாக பூஜா ஹெக்டேவின் (Pooja Hegde) உடையை தனது வாயால் கவ்வ முயற்சித்தார். ஆனால் பூஜா ஹெக்டே இதனை பொருட்படுத்தாமல் ஆடியபடியே நடந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், ‘இந்த வயசுல இதெல்லாம் தேவையா’ என சல்மான் கானை கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.... வலிமை இயக்குனரின் மாஸ்டர் பிளான்... AK 61 உடன் அஜித்தை கழட்டிவிடும் எச்.வினோத் - அடுத்த படம் யாருடன் தெரியுமா?

Scroll to load tweet…