பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்களிலேயே சர்ச்சையுடன் உலா வருபவர் சல்மான் கான். மானை சுட்டது முதல் ஐஸ்வர்யா ராயுடனான காதல் வரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத மனிதர். ஆனால் இவரது ரசிகர்கள் கூட்டத்திற்கு  குறைவே இல்லை. அந்த அளவிற்கு இந்திய முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார். 

சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங் 3 திரைப்படம் வசூல் ரீதியாக தட்டித்தூக்கியது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவான இந்த படத்தை நம்ம பிரபுதேவா இயக்கி இருந்தார். நடிகர் சல்மான் கான் அவரது சகோதரர் அர்பாஸ் கான் உடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, இந்த நடிகர் சுதீப், மஹி ஹில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். 

இதையும் படிங்க: தோழியிடம் அத்துமீறிய அமலா பால்... கண்ட இடத்தில் கைவைத்து சில்மிஷம்... முகம் சுழிக்க வைக்கும் ஆபாச நடனம்...!

இந்நிலையில் பிரபல நடிகை சோனம் கபூருடன் இணைந்து "பிரேம் ரத்தன் தன் பயோ"  என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தின் புரோமோஷன் விழாவின் போது சல்மான் கானுக்கு மிகவும் வேர்க்கிறது. மீடியாக்கள் அனைத்தும் போட்டோ எடுக்க காத்திருக்கின்றன. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பட்டென சோனம் கபூரின் துப்பட்டாவை இழுந்து தனது முகத்தை துடைத்துக் கொள்கிறார். 

இதையும் படிங்க: நீச்சல்குளத்தில் டாப்லெஸ் போஸ்... பிக்பாஸ் பிரபலத்துடன் இளம் நடிகை போட்ட ஆட்டம்...வைரலாகும் வீடியோ....!

அதை பார்த்த சோனம் கபூர் செம்ம கடுப்பில் அவரை முறைத்து பார்ப்பது போன்று வீடியோவில் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சம்மந்தமே இல்லாமல் இப்போது சல்மான் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.