பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் நடிப்பில் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் 'தபாங்'. அப்படத்தின் ரீமேக் தான் ஒஸ்தி என்ற பெயரில் சிம்பு நடித்தார். இந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அந்தப்படத்தின் இரண்டாம் பாகமும் சக்கைப் போடு போட்டது. இதனையடுத்து தபாங் படத்தின் 3ம் பாகத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். 

இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு பெற்றது. இதனையடுத்து வெளியான தபாங் 3 படத்தின் டிரெய்லர் சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். கான் குழுவினர் தயாரித்துள்ள இப்படத்துக்கு சாஜித் வாஜித் இசையமைத்துள்ளனர். டிசம்பர் மாதம் 20ம் தேதி இந்த படத்தை திரையிட முடிவு செய்துள்ள நிலையில், படக்குழு விளம்பர வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தியில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் தமிழிலும் டப் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  

 இதன் பாடல்கள் வெளியாகி பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 'ஹட் ஹட்' (Hud Hud) எனும் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதை சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர்  செய்துள்ளார். சாமியார்களுடன் சேர்ந்து சல்மான் கான் குத்தாட்டம் போடும் அந்த பாடம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.