பிரபாஸ் நடிப்பில் வெளியான, சலார் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து... படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 

KGF பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'சலார்'. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் பிரபாஸ், இந்த முறையாவது வெற்றி படத்தை கொடுப்பாரா? என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியான நிலையில்... அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூலிலும் வாரி குவித்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ரவீனாவுக்கு ஸ்டோர் ரூமில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!! கமல் கொடுத்த சர்பிரைஸ்... கண்ணீர் விட்ட தருணம்!

பலர் இப்படத்தை KGF படத்துடன் ஒப்பிட்டு பேசி வந்தாலும்... இது KGF போல் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட தனித்துவமான கதையம்சம் கொண்ட படமாக உள்ளது என பாசிட்டிவ் விமர்சனங்களும் இப்படத்திற்கு கிடைத்தன. பிரபாஸின் அதிரடி ஆக்ஷன், பிருத்விராஜின் நடிப்பு... ஸ்ருதியின் எளிமை, ஓவ்வொரு காட்சியிலும் உள்ள பிரமாண்டம், அழுத்தமான டயலாக்ஸ் என அனைத்துமே ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க..! இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அவலம்... அம்மு அமிராமி ஆதங்கம்!

இன்று காலை சினிமா வர்த்தக நிபுணர்கள் கூற்றுப்படி 'சலார்' திரைப்படம் முதல் நாளில்... 165 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. ஆனால், 'சலார்' படத்தை தயாரித்துள்ள ஹம்பலோ ஃபிலிம்ஸ், சலார் பட வசூலை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, முதல் நாளிலேயே இப்படம் சுமார் 178 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. எப்படியும் நான்கு நாட்களில் இப்படம் 500 கோடியை எட்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Scroll to load tweet…