பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. 

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இதில், நடிகர் விஜய் ராணுவ அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தை அந்த சமயத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அந்த விடுமுறை நாட்களை டார்கெட் செய்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் மற்றும் யாஷ் நடித்துள்ள கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களும் ரிலீசாக உள்ளன. 

இவை இரண்டும் பான் இந்தியா படங்கள் என்பதால் இந்தியா முழுவதும் பரவலாக வெளியிடப்படும், இதுதவிர அமீர்கான் நடிப்பில் உருவாகி உள்ள லால் சிங் சட்டா திரைப்படமும் அன்றைய தினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பீஸ்ட் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஏனெனில் பீஸ்ட் படத்தை தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். தமிழ்நாட்டில் பீஸ்ட் படத்திற்கு ஏராளமான திரையரங்குகள் கிடைத்தாலும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆதலால் பீஸ்ட் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது.