sakthi scolding kanja karuppu why?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது, இந்நிலையில் சக்தியை பற்றிய ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் நடிகர் வையாபுரி, கஞ்சா கருப்பிடம் "இரவு உங்களை சக்தி அடித்து விட்டானா..?" என கேட்க அதற்கு கஞ்சா கருப்பு சரியான அடி அண்ணன் என மிகவும் பாவமாக கூறுகிறார்.

என்ன பிரச்சனை அவனுக்குன்னு தெரியவில்லை...? நன்றாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தவன் தன்னுடைய இடுப்பு பகுதியை நோக்கி நாலைந்து முறை இரவில் குத்தியதாகவும் தான் அணிந்திருந்த தாயத்து குத்தி காயமானதாகவும் கூறுகிறார்.

இதை தொடர்ந்து கஞ்சா கருப்பு இனி இவன் கூட தூங்க முடியாது என தன்னுடைய போர்வையை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றதாக தெரிவிக்கிறார். பின் சினேகன் அங்கு வர அவரிடமும் நேற்று சக்தி அடித்தாரே அதை பற்றி பேசிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் வையாபுரி.

உடனே சினேகன், தனக்கும் ஒரு சந்தேகம் மிகவும் அதிகமாக கோபப்படுகிறார் சக்தி... நாமெல்லாம் கோபப்பட சில மணி நேரமாவது அந்த கோவம் இருக்கும். ஆனால் சக்தி இரண்டு நிமிடம் கூட ஆகாமல் மீண்டும் வந்து அண்ணா சாப்பிட்டிகளா என, மிகவும் சகஜமாக கேட்கிறார் என கூறி சிரிக்கிறார்.

மொத்தத்தில் சக்திக்கு எதோ பிரச்சனை இருக்கிறது என்பது போல இவர்கள் மூன்று பேரும் பேசி வருகின்றனர். இனி வரும் நாட்களில் என்னவெல்லாம் நடக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்...