நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு, இரண்டாவது வாரமே வெளியேறியவர் பிரபல நடிகை வனிதா.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவங்கள் குறித்து வெளியே வந்ததும், பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி மூலம் தெரிவித்தார்.  இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ள சாக்ஷிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, விவாகரத்து ஆகி விட்டதாக சமூக வலை தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,  தனக்கு தெரிந்த உண்மைகளை கூறியுள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், நடிகை சாக்ஷி எப்படிப்பட்டவர் என்பது தனக்கு தெரியும், மிகவும் உண்மையான பெண்.  அவருடைய நற்குணங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என அவரைப்பற்றி தகவலைகளை தெரிவித்துள்ளார்.

சாக்ஷிக்கு ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டு திருமணமாகி விவாகரத்து பெற்றவர், என வெளியாகும் தகவல் முற்றிலும் பொய்.  இதுவரை திருமணமே ஆகாத அவருக்கு எப்படி விவாகரத்து நடக்கும் என கேட்டுள்ளார்.  மேலும் நடிகைகள் என்றால் இப்படிதான் சில கதைகள் பரவுவதாகவும் கூறியுள்ளார்.  

தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளே இருக்கும் சாக்ஷி கவினை காதலித்து வருவது போல் நடந்து கொண்டு , இருவருக்கும் பிரேக்அப் ஆகிவிட்டதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்து நேற்றைய தினம் கூட லாஸ்லியா மற்றும்  சாக்ஷிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.