தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வந்த இவர், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். இதன் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டிகளில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் பிரபலமானார். பாய்சன் என நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்ட சாக்‌ஷி, வாக்கெடுப்பின் அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சாக்‌ஷிக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது. 

தற்போது டெடி, சின்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து வரும் சாக்‌ஷி, தனது அசத்தல் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் கவர்ச்சி உடையில் சாக்‌ஷி பங்கேற்ற போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் செம சர்ச்சைகளை கிளப்பியது. இது என்ன டிரஸ் என சாக்‌ஷியை நெட்டிசன்கள் செமையாக கலாய்த்தனர். புண்பட்ட ரசிகர்கள் மனதை ஆற்றுவதற்காக, மீண்டும் ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார் சாக்‌ஷி. 

முழுக்க முழுக்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான பாவடை, தாவணியில் க்யூட் போட்டோக்களை எடுத்துள்ளார். பச்சை நிற தாவணியில் இடுப்பு தெரியும் படியாக சாக்‌ஷி கொடுத்துள்ள அசத்தல் போஸ் சோசியல் மீடியாவில் செம் வைரலாகி வருகிறது.

 

மேலும் பாவடை தாவணி மீதான காதல் மட்டும்  மறப்பதே இல்லை என பதிவிட்டுள்ளார். சாக்‌ஷியின் இந்த அடக்க ஒடுக்கத்தால் கவரப்பட்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.