பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், நாமினேஷன் படலம் நிகழும். இதில் இருவரை காரணத்தோடு பிக்பாஸ் அறைக்கு சென்று போட்டியாளர்கள் நாமினேட் செய்யவேண்டும். ஆனால் இந்த வாரம் திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் சற்று வித்தியாசமாக நடந்தது. 

பிக்பாஸ் இறுதி நாட்களை நெருங்கி கொண்டு இருப்பதால் ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் சக போட்டியாளர்கள் குறையை கூறி... நாமினேட் செய்தனர்.

ஆனால் சற்று வித்தியாசமாக ரியோ... அனிதாவிடம் நேரடியாக பேச வேண்டிய விஷயத்தை, நாமினேட் செய்யும் இடத்தில் பேசி, இதற்காக எல்லாம் நான் அவரை நாமினேட் செய்யவில்லை என தெரிவித்தார். நாமினேட் செய்யாத ஒருவர் பற்றி ஏன் ரியோ அந்த இடத்தில் பேச வேண்டும் என்கிற யோசனை ஒரு நிமிடம் அனைவருக்குமே வந்து போனது. 

இந்நிலையில் இதை பற்றி, பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களின் ஒருவரான சாக்ஷி அகர்வால் தனது கருத்தை வீடியோ மூலம் தெரிவித்து ரியோவின் தவறையும் சுட்டி காட்டியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: முதல் முதலாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் நடந்தது. நாமினேட் பண்ணுவதற்கான காரணங்களை ஓப்பன் ஆக சொல்வது என்பதே ஒரு பெரிய டாஸ்க். நாமினேட் பண்றதுக்கு ரீசன் சொல்லலாம், ஆனால் பண்ணாமல் இருப்பதற்கு எதற்காக ரீசன் சொல்ல வேண்டும். 

ரியோ அனிதா குறித்து பேசினார், ஆனால் நாமினேட் செய்யவில்லை. தனியாக பேசி கிளியர் பண்ண வேண்டிய விஷயத்தை நாமினேஷனில் கூறியதால் ஒரு பிரச்சனையாகிவிட்டது. ஓப்பன் நாமினேஷன் என்பது ஒரு நல்ல விஷயம். நாம பண்ற தப்பு நமக்கே தெரிந்துவிடும். அதை கரெக்ட் பண்ணி விட்டு பாசிட்டிவ் கேம் விளையாடினால் ஃபைனல் வரைக்கும் போகலாம்’ என்று சாக்ஷி அகர்வால் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ...