தெலுங்கில், மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. 

மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தை, தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப்படத்தை தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழி நடிகர்களும் மிக முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை பிரபல நடிகரும், சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார். சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். குறிப்பாக இப்படத்தில், அமிதாப்பச்சன், நடிகர் சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதிபாபு, நயன்தாரா, தமன்னா, நிகாரிக, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகை அனுஷ்காவும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். இந்த படத்தின் நாயகனாக சிரஞ்சீவி நடித்துள்ளார். இப்படம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த புரட்சியை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று உண்மைகளை படமாக உருவாக்கி உள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப்பின் சிரஞ்சீவி, இந்த படத்தில் நடிப்பதால் தெலுங்கு ரசிகர்கள் இப்படத்தை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக, இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.