பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலர் டீச்சராக வந்து, பல இளைஞர்கள் மனதைக் கொல்லைக்கொண்டவர் நடிகை சாய் பல்லவி. இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும், இவருக்கு தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் சாய் பல்லவி:

சாய் பல்லவி தற்போது இயக்குனர் எ.எல்.விஜய் இயக்கத்தில் 'கரு' படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. 

அதிர்ச்சியில் ரசிகர்கள்:

இந்நிலையில் சாய் பல்லவி புகைப்படம் ஒன்று வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் சாய் பல்லவி முடியை கிராப் செய்துக்கொண்டு இது மலர் டீச்சரா? என அனைவரும் அதிர்ச்சியாகி கேட்கும் வகையில் உள்ளது. மேலும் இவர் நடித்து வரும் படங்களிலும் அவ்வபோது இயக்குனர்களிடமும் சண்டை மாட்டி வருவதாக கூறப்படுகிறது.

அந்த புகைப்படம் இதோ: