நடிகை சாய் பல்லவி, 10  வருடத்திற்கு பின், இவர் திரையுலகிற்கு வர முக்கிய காரணமாக அமைத்த மேடையில் நடிகர் பிரபுதேவாவுடனான பந்தம் குறித்து தெரிவிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

நடிகை சாய் பல்லவி, கடந்த 2008ஆம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" என்கிற நடன நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு அசத்தியவர்.

இவர் கலந்து கொண்டு 10 வருடங்கள் முழுமையாக நிறைவு பெற்று விட்டது. மலையாளத்தில், பிரேமம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொண்ட சாய் பல்லவி, மலர் என்கிற கதாப்பாத்திரம் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இன்றி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.  சமீபத்தில் தமிழில் இவர் நடித்து வெளியான 'மாரி 2 ' திரைப்படம் திரையரங்குகளில் வசூலில் முதலீட்டுக்கு இழுக்கு ஏற்படாத அளவிற்கு லாபத்தை பெற்று விட்டது.

குறிப்பாக இந்த படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி ஆடும் 'ரவுடி பேபி' பாடல் மற்றும் டான்ஸ் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.

இந்நிலையில் சாய் பல்லவி,  நடிகர் பிரபு தேவாவுடன் 10  வருடத்திற்கு பிறகு, தன்னுடைய நடன வாழ்க்கை துவங்கிய 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' டான்ஸ் செட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நெகிழ்ச்சியாகியுள்ளார். இதில் இருந்து தன்னுடைய நடன குருவான பிரபுதேவாவை எந்த அளவிற்கு சாய் பல்லவி மதிக்கிறார் என கூறி பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.