saipallavi karu movie release date announced

தேவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி இருக்கும் திரைப்படம் 'கரு' இந்த படத்தின் மூலம் முதல் முறையாக தமிழில் சாய் பல்லவி அறிமுகமாகிறார்.

இந்த திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு, ரிலீசுக்கு தயாராக இருந்த போதிலும், ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தனர் படக்குழுவினர்.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் விதத்தில் இணையதளத்தில் தேதி குறிப்பிடப்பட்ட போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி ஒரு குழதையின் அம்மாவாக நடித்துள்ளார். மேலும், நாகசௌரியா, ஆர்.ஜே பாலாஜி, சந்தானபாரதி, ரேகா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது குறிபிடத்தக்கது.