saipallavi and vijay movie name announced
"பிரேமம்' படத்தின் மூலம் மலையாள ரசிகர்கள் மனதை மட்டும் இல்லாமல் ஓட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்துச் சென்றவர் நடிகை சாய் பல்லவி.
இவரை தமிழில் காற்று வெளியிடை படத்தில் அறிமுகம் செய்ய, மணிரத்தினம் போன்ற பெரிய இயக்குனர்கள் முயற்சி செய்தும் ஒரு சில காரணத்தினால் அது முடியாமல் போனது.
சமீபத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் இவர் நடிப்பதாக கூறப்பட்டது, ஆனால் தற்போது பிரபு தேவாவை வைத்து இயக்கி தேவி என்கிற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஏ.எல்.விஜய் அடுத்ததாக "கரு " என்கிற திகில் திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக "சாய் பல்லவி" அறிமுகம் கொடுக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ஏ.எல் விஜய் "ஜெயம் ரவி" மற்றும் "ஷாயிஷா சாய்கல்" லை வைத்து இயக்கி முடித்துள்ள வனமகன் திரைப்படம் திரைக்கு வந்தவுடன் 'கரு" படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
