Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் தனுஷுடன் ஜோடி போடுகிறாரா சாய் பல்லவி? எந்த படத்தில் தெரியுமா..!

நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில், தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
 

saipallavi again pair with dhanush?
Author
Chennai, First Published Jun 18, 2021, 7:43 PM IST

நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில், தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு, பல பாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் கூட தனுஷின் இயல்பான நடிப்பையும், இயக்குனர் மாரி செல்வராஜின் தனித்துவமான இயக்கத்தையும் மனதார பாராட்டி இருந்தனர். இந்நிலையில், தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் நடித்து வரும் 'தி கிரே மேன்' படத்திற்காக கடந்த பிப்ரவரி மாதமே குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.

saipallavi again pair with dhanush?

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து விட்டாலும், தற்போது இவருடைய மாமனாரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதால் தனுஷ் இந்தியா திரும்புவதில் தாமதம் ஆகும் என கூறப்படுகிறது. 

இந்தியா வந்த கையோடு,  கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம், தன்னுடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம், மற்றும் 'அசுரன்' பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடிக்க உள்ளார். இதை தொடர்ந்து இவர் அடுத்ததாக நடிக்க உள்ள பாலிவுட் படம் ஒன்றின் தகவலும் வெளியாகியுள்ளது.

saipallavi again pair with dhanush?

தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதை போஸ்டர் வெளியிட்டு படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை நாராயணதாஸ் நரங் என்பவர் தன்னுடைய 4 ஆவது படமாக தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

saipallavi again pair with dhanush?

இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக, தனுஷுடன் ஏற்கனவே 'மாரி' படத்தில் நாயகியாக நடித்திருந்த சாய் பல்லவி, இரண்டாவது முறையாக ஜோடி போட உள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. ஆனால் இதுவரை இந்த தகவலை படக்குழு உறுதி செய்யவில்லை. எனவே அதிகார பூர்வ தகவல் வெளியாகும் வரை கார்த்திருப்போம். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios