மலர் டீச்சர் ஆக மாஸ் என்ட்ரி கொடுத்து, முதல் படத்திலேயே மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் சாய் பல்லவி. அதைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமான இவரது பிடா படமும் பிளாக் பஸ்டர் தான்.

ஆனால் தமிழில் வெளியான தியா படம் தோல்வியைத் தழுவியது. இந்த படத்தில் நடித்து வந்த போதே, செல்வராகவன் தயாரிப்பில் சூர்யாவின் என்ஜிகே, தனுஷின் மாரி-2 படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

பிறகு தமிழில் தேடி வந்த சில படங்களை கதை பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார். ஆனால் தெலுங்கில் ஆர்வத்துடன் நடித்து வருகிறார், சாய் பல்லவி.

தற்போது பாடி பாடி லீஷ் மனசு படத்தில் சர்வானந்துடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வேணு உடுகுலா இயக்கும் படத்தின் கதாநாயகியாகவும் கமிட்டாகிருக்கிறார்.

மலர் டீச்சருக்கு தொடர்ந்து தெலுங்கில் வெற்றி மழை தான். அதுமட்டுமல்லாமல் நல்ல கதாபாத்திரங்களும் கிடைப்பதால், தமிழைக் காட்டிலும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இருக்க, ஆர்வத்துடன் நடித்து வருகிறார், சாய் பல்லவி.