Gargi movie : கார்கி படத்தை கெளதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை சாய் பல்லவிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுதவிர அவர் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்டும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி உள்ள ‘கார்கி’ என்கிற படத்தின் அப்டேட்டும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 

கார்கி படத்தை கெளதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே நிவின் பாலி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ரிச்சி படத்தை இயக்கியிருந்தார். அவர் இயக்கும் இரண்டாவது படம் தான் கார்கி. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது.

Scroll to load tweet…

இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரையாந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் பல்லவியின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

கிளிம்ப்ஸ் வீடியோவில் நடிகை சாய் பல்லவி டப்பிங் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்காக அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளார். இப்படத்தை பற்றி பேச பல மாதங்களாக காத்திருந்ததாகவும், இறுதியாக இன்று தான் அதற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் நெகிழச்சியுடன் கூறி உள்ளார் சாய் பல்லவி.

இதையும் படியுங்கள்... திருடி மாட்டிக்கொண்ட காஜல் அகர்வால்... ‘இதெல்லாம் தேவையா’ என விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்

YouTube video player