kajal agarwal : நேற்று தனது முதலாவது அன்னையர் தினத்தை கொண்டாடிய காஜல் அகர்வால், தனது மகனை கட்டி அணைத்தவாரு இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டிருந்தார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் கவுதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த காஜல், கடந்தாண்டு கர்ப்பமானதை அடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

இதனிடையே நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நெய்ல் கிச்சிலு என பெயரிட்டுள்ளதாக அறிவித்த காஜல், நேற்று தனது முதலாவது அன்னையர் தினத்தை கொண்டாடினார். இதையொட்டி தனது மகனை கட்டி அணைத்தவாரு இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட காஜல், ஒரு கவிதை ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அந்த கவிதை தான் தற்போது அவருக்கு தலைவலியாக மாறி உள்ளது. ஏனெனில் அது காஜல் எழுதிய கவிதை இல்லையாம். உண்மையில் அது சாரா என்பவர் எழுதிய கவிதையாம், அதைத்தான் காஜல் அப்படியே காப்பி அடித்து தனது கவிதை போல் போட்டுள்ளார். இந்த விஷயம் சாராவுக்கு தெரிந்ததை அடுத்து, அவர் அது என்னுடைய கவிதை, எனக்கு கிரெடிட் கொடுக்குமாறு யாராவது சொன்னால் நன்றாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

View post on Instagram

அடுத்தவர் கவிதையை திருடி போட்டுள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்ததை பார்த்த காஜல், தனது போஸ்ட்டை எடிட் செய்து, அதில் சாராவுக்கு கிரெடிட் கொடுத்தார். இதையடுத்து அந்த போஸ்டின் கமெண்ட்டையும் ஆஃப் செய்துவிட்டார் காஜல். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் தேவையா உங்களுக்கு என விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பிறந்தநாள் கொண்டாடும் சாய் பல்லவிக்கு கமல் கொடுக்க உள்ள மிகப்பெரிய சர்ப்ரைஸ்- அட.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!