கடந்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி வெளியான மாரி 2 , படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்த சாய்பல்லவிக்கு, இந்த படம் தமிழில் திருப்பு முனையாக அமைத்துள்ளது. இவர் தமிழில் அறிமுகமான 'கரு' படம் இவருக்கு தோல்வி படமாக அமைந்தாலும்,  'மாரி 2' படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடித்துவிட்டார்.

ஆனால் அதே தினத்தில் சாய்பல்லவி நடித்த தெலுங்கு படமான 'படி படி லிசே மனசு' என்ற படமும் வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் அங்கு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.15 கோடிக்கும் மேல் நஷ்டம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு இவர், சொன்னது போல் சம்பள பாக்கியை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சாய்பல்லவிக்கு கொடுக்க வேண்டிய ரூ.40 லட்சத்தை தயாரிப்பாளர் கொடுக்க சாய் பல்லவியை அவருடைய வீட்டிற்க்கே சென்று சந்தித்துள்ளார். தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கருத்தில் கொண்டு பணத்தை வாங்க மறுத்துவிட்டாராம் சாய்பல்லவி. அவருடைய  பெற்றோரும் இதையே கூற தயாரிப்பாளர் நெகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. 

சாய்பல்லவி சம்பள விஷயத்தில், இப்படி நடந்து கொண்டுள்ளது, மற்ற நடிகைகளை வியக்க வைத்துள்ளது.