‘மாரி 2’ படம் படு சொதப்பலாக வந்திருந்தாலும் அதில், தோற்ற மேட்சில் ஒரே ஒரு பிளேயர் சென்சுரி அடித்தமாதிரி, அதிரடி பெர்ஃபார்மன்ஸ் காட்டி மோஸ்ட் வாண்டட் நடிகையாகிவிட்டார் சாய் பல்லவி.

அதிலும் குறிப்பாக ‘ரவுடி பேபி’ பாடலில் தனுஷுடன் இணைந்து அவர் போட்டிருக்கும் கெட்ட ஆட்டத்துக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. இதுவரை நடித்த மலையாள, தெலுங்கு, தமிழ்ப் படங்களில் எதிலும் காட்டாத அளவுக்கு தன்னை அநியாயத்துக்கு எக்ஸ்போஸ் பண்ணியிருந்தார் சாய் பல்லவி.

இதையொட்டி வரிசையாக அவருக்குத் தமிழிலும் தெலுங்கிலும் படங்கள் குவிந்து வரும் நிலையில், கதை சொல்ல வருகிறவர்களுக்கு முன்கூட்டியே இரண்டு கண்டிஷன்கள் போட ஆரம்பித்திருக்கிறாராம் அவர். 

கண்டிஷன் நம்பர் ஒன் குட்டைப்பாவாடை, மினி ஸ்கர்ட் போன்ற குறைவான ஆடைகளை அணிந்து நடிக்கமாட்டேன். அது என் உடல்வாகுக்கு ஒத்துவராது என்பது மட்டுமல்ல. நான் அப்படி நடிப்பதை விரும்பவில்லை. கண்டிஷன் நம்பர் டூ...எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும், எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் முத்தக் காட்சிகளில் நடிக்கமாட்டேன். ஏனென்றால் நான் நடிக்கும் எல்லாப் படங்களையும் என் பெற்றோர்களும் பார்க்கவேண்டுமென்று விரும்புகிறேன்’ என்கிறார் சாய் பல்லவி.

இது தனுஷ் படங்களுக்கும் பொருந்துமா என்று யாராவது கேட்டுச்சொன்னால் நல்லா இருப்பீங்க...