’மாரி 2’ படத்தில் நெருக்கமாக நடித்தவகையில்  ஓவர் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி சாய் பல்லவியும் தனுஷும் பஞ்சும் நெருப்புமாய் பற்றிக்கொண்டு அலைகிறார்கள் என்றொரு வயிற்றெரிச்சல் செய்தி கோடம்பாக்கத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் தனது காதல் வாழ்க்கை குறித்து மனம் திறக்கும் சாய்பல்லவி, தான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்றும் தன்னை யாருடன் இணைத்துக் கிசுகிசுத்தாலும் அது நூறு சதவிகிதம் பொய்யான தகவலே. தனுஷுடன் ஒரு தியேட்டருக்குப் படம் படம் பார்க்கப்போனால் உடனே அது லிவிங் டுகெதர் வரை போய்விடுமா என்கிறார்.

’இதுவரை நான் நடித்த படங்களை வைத்து எனக்கு தேவையில்லாமல் முற்போக்குப் பெண் என்பது போன்ற முத்திரையைக் குத்தியிருக்கிறார்கள் . என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை. இப்படி சொல்வதால் அதற்கு எதிராக இருக்கிறேன் என்பதல்ல.

இது எல்லாமே அவரவர்களின் செயல்பாடுகளை பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எனக்கு அத்தகைய உறவு தேவையில்லை. நான் திருமணம் செய்துகொண்டு, அதுவும் பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை  மணந்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன்’என்று தனுஷ் கிசுகிசுக்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கிறார் சாய் பல்லவி.