வெற்றிப்படங்களை இரண்டாம் பாகம் எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில், படுதோல்வியை சந்தித்த 'மாரி' படத்திற்கு இரண்டாம் பாகம் எடுத்து அதில் வெற்றி கண்டவர் இயக்குனர் பாலாஜி மோகன்.

கடந்த வாரம் வெளியான 'மாரி 2 ' படத்தில் நடித்துள்ள நடிகர் தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும் 'மாரி 2 ' வெற்றி பெற்றுள்ளதால் தனுஷ் மூன்றாம் பாகம் எடுப்பது குறித்து யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகை சாய் பல்லவி தமிழில் அறிமுகமான கரு படத்திற்கு பெரிதாக வரவேற்பு இல்லை என்றாலும் இந்த படம் தமிழில் சாய் பல்லவியின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் இவர் நடித்து முடித்துள்ள NGK திரைப்படமும், கண்டிப்பாக தன்னை மற்றொரு தளத்திற்கு கொண்டு சொல்லும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக சாய் பல்லவி அவருடைய நட்பு வட்டாரத்தில் பெருமை பேசி வருகிறார். 

இவருடைய நடிப்பை ரசிகர்கள் விரும்புவதால், இவரை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கூறி ஷாக் கொடுக்கிறாராம். சிலர்,  ஒரு படத்தில் வெற்றியை கொடுத்து விட்டு இவருடைய அலப்பறை தாங்க முடியவில்லை என கோடம்பாக்கத்தில் கிசுகிசுத்து வருகிறார்களாம்.