sai pallavi celebrate birthday in dhanush
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடித்து வெளியான திரைப்படம் மாரி. தனுஷ் டான்னாக நடித்த இந்த திரைப்படம், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியானாலும், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை.
பொதுவாக வெற்றி பெற்ற திரைப்படத்திற்கு தான் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது வழக்கம். இருப்பினும் மாரி படத்திற்கு இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தையும் இயக்குனர் பாலாஜி மோகன் தான் இயக்குகிறார்.
மேலும் இதில் கதாநாயகியாக 'தியா' படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். விறுவிறுப்புடன் நடைப்பெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி, நடிகை சாய் பல்லவி பிறந்தநாளை மாரி 2 படக்குழுவினர் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது நடிகர் தனுஷும் கலந்துக்கொண்டார்.
இதன் புகைப்படங்கள் இதோ:
