ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் மோதும் ‘விஸ்வாசம்’ படத்தின் கதையே சூப்பர் ஸ்டாரின் ‘முரட்டுக்காளை’ படத்திலிருந்து உல்டா செய்யப்பட்டதுதான் என்று கொஞ்சமும் நம்ப முடியாத வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வருகின்றன.

சிறுத்தை சிவா ஏற்கனவே இயக்கிய ‘வீரம்’ படத்தில் கூட முரட்டுக்காளை படத்தின் சாயலில் ஒன்றிரண்டு காட்சிகள் இருந்தன. அவை பெரிதும் ரசிக்கப்பட்டதால் மொத்தப்படத்தையும் சுட்டால் என்ன என்ற எண்ணத்தில்தான் சிவா இந்த முடிவுக்கு வந்திருக்கக்கூடும் என்கிறது அத்தகவலைப் பரப்பும் வட்டாரம்.

இன்னொரு குரூப்பினரோ அடங்காத முரட்டுக்காளையாய் ஊருக்குள் திரியும் அஜீத்தை, திடீர் திருமணத்துக்குப் பின்னர் நயன்தாரா எப்படி தன் வழிக்குக் கொண்டு வந்து நல்லவராக்கினார் என்ற அரதப்பழசான ஒருவரிக்கதைதான் ‘விஸ்வாசம்’. இப்படிப்பட்ட கதைகள் தமிழில் பல்லாயிரம் இருக்க, இதில் முரட்டுக்காளையில் காப்பி அடிக்கவேண்டிய அவசியம் சிவாவுக்கு எங்கிருந்து வந்தது என்று சப்போர்ட் பண்ணியும் பேசுகிறார்கள்.

ஆக இதன் மூலம், படத்தை சும்மா சுருட்டாமல்  ‘விஸ்வாசம்’ படத்தில் கதை என்ற ஒன்றைவைத்துத்தான் சிவா படம் இயக்கியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.