Rs 50 crore damaged by spider movie

ஸ்பைடர் படத்தால் ரூ.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தயாரிப்பாளர்கள் கதறி அழுகின்றனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஸ்பைடர்’.

இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றவில்லை.

இப்படம் இந்தியாவிலேயே அதிகம் நஷ்டம் அடைந்த படங்களில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

தற்போதுவரை இந்தப் படத்தால் ரூ.50 கோடி வரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று தயாரிப்பாளர்களே கூறுகின்றனர்.

அதேநேரத்தில் படம் ரூ.150 கோடி வரை வசூல் செய்துள்ளது என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஆம். படம் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டாலும் தெலுங்கில் மட்டுமே அந்த அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று உறுதியாக தெரிகிறது.

மகேஷ்பாபு நடிப்பில் தொடர்ந்து இரண்டாவது மிகப்பெரிய நஷ்டம் ‘ஸ்பைடர்’ என்பது குறிப்பிடத்தக்கது.